தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எகிறும் கல்வி செலவு - கவலையில் பெற்றோர்கள்

எகிறும் கல்வி செலவு - கவலையில் பெற்றோர்கள்

எகிறும் கல்வி செலவு - கவலையில் பெற்றோர்கள்


UPDATED : பிப் 19, 2011 12:00 AM

ADDED : பிப் 19, 2011 02:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2011 12:00 AM ADDED : பிப் 19, 2011 02:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை முறை அல்லது திருமணம் போன்ற விஷயங்கள் பற்றி கவலைப்படுவதைவிட, படிப்பிற்கான கூடுதல் செலவுப் பற்றியே கவலைப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.


மொத்தம் 81% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி செலவைப் பற்றி கவலைப்படுவதாகவும், அவர்களில் 30% பெற்றோர்கள், கல்வியின் தரம், பள்ளியில் சேர்த்தல் மற்றும் குழந்தைகள் பெறும் மதிப்பெண்கள் ஆகியவற்றைக் காட்டிலும் கல்வி செலவைப் பற்றியே அதிகம் கவலைப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகரித்துவரும் கல்வி செலவே பெற்றோர்களின் முக்கிய கவலையாக இருப்பதாகவும், 39% பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வி செலவை நினைத்து கவலைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் உயர்கல்விக்காக மட்டுமின்றி, பள்ளிக் கல்வியின்போதான செலவுகளுக்கும் கூடுதல் நிதி தேவையை பெற்றோர்கள் விரும்புகின்றனர்.


மேலும் 51% பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவை சமாளிக்க, கல்வி காப்பீடே(இன்சூரன்ஸ்) சிறந்த பயன்தரும் என்று நம்புகின்றனர். இந்த ஆய்வானது இந்தியாவின் 11 நகரங்களில் 2,402 பெற்றோர்களிடம் நடத்தப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us