தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரந்த அறிவு பெறுவதற்கான இளைய இந்தியா உதவித்தொகை

பரந்த அறிவு பெறுவதற்கான இளைய இந்தியா உதவித்தொகை

பரந்த அறிவு பெறுவதற்கான இளைய இந்தியா உதவித்தொகை


UPDATED : பிப் 20, 2011 12:00 AM

ADDED : பிப் 20, 2011 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2011 12:00 AM ADDED : பிப் 20, 2011 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் சில புகழ்பெற்ற தொழில் நிபுணர்கள் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவானது, இளைய இந்தியா உதவித்தொகை(ஒய்.ஐ.எப்) என்றொரு திட்டத்தை அறிவித்துள்ளது.


நாட்டிலேயே முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உதவித்தொகை திட்டத்தில், முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு பலதுறை சார்ந்த படிப்பறிவு மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி போன்றவை ஒரு வருடம் வழங்கப்படும். நமது கல்வி திட்டத்தில் இருக்கும் குறுகிய தன்மைகளைக் கடந்து, நடைமுறை வாழ்வில் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த முன்முயற்சியானது, நாடு முழுவதிலுமுள்ள 50 இளம் தலைவர்களை, டெல்லியில் ஒரு வருட முதுநிலை ரெசிடென்ஷியல் படிப்பிற்காக ஒன்று சேர்க்கும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உதவித்தொகையை பெற, இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் அல்லது இளநிலை படிப்பு முடித்து 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வரலாறு, சமூகவியல், இலக்கியம், பொறியியல், சட்டம், அக்கவுண்டன்சி ஆகிய பல துறைகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 24 முதல் கிடைக்கின்றன. வகுப்புகள் மே மாதம் 30 முதல் தொடங்குகின்றன. இதைப்பற்றி மேலும் விவரம் அறிய www.youngindiafellowship.com என்ற வலைத்தளம் செல்லவும்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us