தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோ செயல்பாட்டு திறனுள்ள கல்வி நிறுவனமா?

இக்னோ செயல்பாட்டு திறனுள்ள கல்வி நிறுவனமா?

இக்னோ செயல்பாட்டு திறனுள்ள கல்வி நிறுவனமா?


UPDATED : பிப் 20, 2011 12:00 AM

ADDED : பிப் 20, 2011 03:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2011 12:00 AM ADDED : பிப் 20, 2011 03:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இக்னோவின் செயல்பாட்டு திறன் பற்றி முதல்முறையாக மத்திய மனிதவளத் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.


இக்னோ தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன. நாட்டின் மிக தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் எளிதாக கல்வியை பெறமுடியாத வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வியை பெறுவதில் இக்னோ இன்றுவரை சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகமானது, சில வகை படிப்புகளில் நேரடி வகுப்பறை பாடப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.


ஆனால் அந்த நேரடி வகுப்பறை பயிற்சி விஷயத்தில்தான் இக்னோவின் செயல்பாட்டு திறனை மத்திய மனிதவள அமைச்சகம் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய குறியீட்டு மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை, ஒரு 5 வருட திட்டமாக நிறுவும் விஷயத்தில், மனிதவள அமைச்சகத்தை அணுகிய போதுதான் இந்த சந்தேகம் எழுந்தது. இந்த திட்டத்தில் குறியீட்டு மொழியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஆராய்ச்சி, திறன் கட்டமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.


நேரடி வகுப்பறை பயிற்சியை உள்ளடக்கிய இந்த திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு இக்னோவிடம் செயல்திறன் உள்ளதா? என்ற கேள்வியுடன் மனிதவள அமைச்சகம் இக்னோவிற்கு ஒரு கடிதம் எழுதியது. இக்னோ ஏற்கனவே குறியீட்டு மொழியில் பி.ஏ. படிப்பை முழுநேர படிப்பாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


திறந்தவெளி பல்கலைக்கழகம் என்ற முறையில் செயல்படும் ஒரு கல்வி நிறுவனம், நேரடி வகுப்பறை பயிற்சியில் ஈடுபடுவது என்ற ஒரு அம்சத்தில்தான் குழப்பமும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து பேசும் இக்னோ வட்டாரமோ, "திறந்தவெளி பல்கலைக்கழகம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளதானது, தொலைதூர கல்வியை மட்டுமே தர வேண்டும். என்பதில்லை. தேவையான இடங்களில் நேரடி வகுப்பறை பயிற்சிகளையும் மேற்கொள்வதுதான் அதன் அர்த்தம். இக்னோவில் சுமார் 14 வகையான நேரடி வகுப்பறை படிப்புகளில் ஏறக்குறைய 500 மாணவர்கள் படித்து வருகிறார்கள்" என்று கூறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us