தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஞ்சாப் பல்கலைக்கழக கல்லூரிகளில் மனிதப் பண்பு நெறிமுறைக் கல்வி

பஞ்சாப் பல்கலைக்கழக கல்லூரிகளில் மனிதப் பண்பு நெறிமுறைக் கல்வி

பஞ்சாப் பல்கலைக்கழக கல்லூரிகளில் மனிதப் பண்பு நெறிமுறைக் கல்வி


UPDATED : பிப் 21, 2011 12:00 AM

ADDED : பிப் 21, 2011 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2011 12:00 AM ADDED : பிப் 21, 2011 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு


டெல்லி மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி -களில் உள்ளது போலவே, நன்னெறி மற்றும் மனிதப் பண்புகள் பற்றிய அறநெறிகள், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 306 கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.


இதுபோன்ற படிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் அவசியம் என்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. குடும்பம் என்ற அமைப்பிலிருந்து, உலக சமூகம் என்பது வரையிலும் ஒரு மாணவர் சிந்திக்கக்கூடிய அம்சங்கள் இந்த படிப்பில் உள்ளன.


தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் எதிர்காலத்தில் சரியான வழியில் பயன்படுத்துவதற்கு அவர்களை தூண்டும் விதமாக இத்தகைய பாடங்கள் அவர்களுக்கு அவசியம் என்பதை நாட்டின் பல தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளன.


இந்த பாடங்கள் ஆங்கில மொழியில் மட்டுமின்றி, ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கல்வியின் உண்மையான நோக்கத்தை அடையவே இத்தகைய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us