ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் செய்முறைத் தேர்வு துவக்கம்
ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் செய்முறைத் தேர்வு துவக்கம்
UPDATED : பிப் 24, 2011 12:00 AM
ADDED : பிப் 24, 2011 01:45 PM
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்தன. இதையடுத்து, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் துவங்கின. வரும் மார்ச் 1ம் தேதி வரை நடக்கும் தேர்வில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல், தேர்வுத்துறை நிர்ணயித்துள்ள தேதிகளுக்குள் தேர்வை நடத்தி முடிக்க, பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அறிவியல் முதல் தாள் (இயற்பியல், வேதியியல்); அறிவியல் இரண்டாம் தாள் (தாவரவியல், விலங்கியல்) என இரு தாள்களாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஒரு தாளுக்கு 50 மதிப்பெண்கள் என, 100 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வுகள் நடக்கும். மீதமுள்ள 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் 100க்கு குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், 200 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத் தேர்வில் 69 மதிப்பெண்களும் கட்டாயம் எடுக்க வேண்டும்.
