தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் மகிழ்ச்சி தேர்வில் தாங்கள் பெறும் கோப்பையில் தான்!

மாணவர்களின் மகிழ்ச்சி தேர்வில் தாங்கள் பெறும் கோப்பையில் தான்!

மாணவர்களின் மகிழ்ச்சி தேர்வில் தாங்கள் பெறும் கோப்பையில் தான்!


UPDATED : பிப் 28, 2011 12:00 AM

ADDED : பிப் 28, 2011 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2011 12:00 AM ADDED : பிப் 28, 2011 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாதாரணமான போட்டி என்றாலே, பலரது கவனமும் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. உலக கோப்பை என்றால் கேட்கவே வேண்டாம். அதுவும் இந்தாண்டு உலககோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. இது தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் முழுவீச்சில் படிப்பில் கவனம் செலுத்தியாக வேண்டும். தற்போது கிரிக்கெட் போட்டிகளும் நடப்பதால் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்பு அதிகரித்துள்ளது.


புனே மாணவர்கள் பலர், உலககோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றாலும் பெறாவிட்டாலும் போட்டியை நேரடியாக பார்க்க மும்பை செல்வோம் என தெரிவித்துள்ளனர். போட்டிகள் ‘டிவி’யில் நேரடியாக ஒலிபரப்பப்படுவதும் கவனத்தை சிதற வைக்கும்.


வரும் மார்ச் 2ல் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கவுள்ளன. தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கவுள்ளன. இதனால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கிரிக்கெட் முடிவுகளை செய்தித் தாள்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வு உங்கள் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் கருவி. எனவே படிப்பில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ளவர்களும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற உதவ வேண்டும்.


கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருந்தாலும், மாணவர்கள் முதலில் தங்களது தேர்வை திறம்பட எதிர்கொண்டு வெற்றிக் கோப்பை பெற வேண்டும் என்ற உத்வேகம் கொள்ளவேண்டும். ஏனெனில், எந்த ஒரு மாணவரும் தனது தேர்வை தொலைத்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியின் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது. மேலும், இந்திய அணி பெறும் கோப்பையை விட, ஒவ்வொரு மாணவரும் தங்களது கல்வியில் பெறும் கோப்பை தான் அவர்களுக்கும், அவர்களது பெற்றொருக்கும் மனம்நிறைந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.


இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்களது கடமையில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களது கடமையை அவர்கள் செய்யட்டும். மாணவர்கள் தங்களது கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாணவரும் வரும் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும். அதற்கு முறையான திட்டமிடலும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அதீத ஆர்வமும், அதற்கான முறையான பயிற்சியும் அவசியம் என்பதை மட்டும் தற்போதைக்கு நினைவில் நிறுத்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us