UPDATED : மார் 01, 2011 12:00 AM
ADDED : மார் 01, 2011 03:56 PM
புதுவையில் இயங்கும் புதுவை பாரதியார் கிராம வங்கி இந்தியன் வங்கியினால் நிதி உதவி பெறும் வங்கியாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வங்கியில் துணை மேலாளர் மற்றும் அலுவலக உதவியாளர் (கிளரிகல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
பி.பீ.ஜி.பீ., வங்கியின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 31.12.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
புதுவை பாரதியார் கிராம வங்கியின் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஸிகல்சர், அக்ரிகல்சர் மார்கெடிங் கோஆபரேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, நிர்வாகவியல், சட்டம், பொருளாதாரம், அக்கவுண்டன்சி போன்ற பிரிவுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறமை கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பிரிவிலும் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறமை கூடுதல் தகுதியாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க தமிழ் மொழியறிவு கட்டாயத் தேவையாகும்.
தேர்ச்சி முறை
பி.பீ.ஜி.பீ., வங்கியின் மேற்கண்ட இரண்டு பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு புதுவையிலும் காரைக்காலிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
புதுவை பாரதியார் கிராம வங்கியின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.350/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு பி.பீ.ஜி.பீ., வங்கிக்கிளையிலோ அல்லது ஆர்.டி.ஜி.எஸ்., அல்லது என்.இ.எப்.டி., முறையிலோ இந்தியன் வங்கியின் புதுவை மெயின் பிராஞ்சிலுள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியின் 935196896 அக்கவுண்ட் எண்ணிலோ செலுத்தலாம். அப்போது மறக்காமல் யூ.டி.ஆர்., எண்ணைப் பெற வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி
பி.பீ.ஜி.பீ., வங்கியின் உதவி மேலாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் பதிய மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 15.03.2011
இணைய தள முகவரி: http://www.puduvaibharathiargramabank.in/career.php
