தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது


UPDATED : மார் 02, 2011 12:00 AM

ADDED : மார் 02, 2011 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 02, 2011 12:00 AM ADDED : மார் 02, 2011 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப். 22ம் தேதியுடன் செய்முறைத் தேர்வுகள் முடிவடைந்தன. அதனைதொடர்ந்து, எழுத்துத் தேர்வுகள் இன்று துவங்கின. தமிழகத்தில் 1,859 மையங்களிலும், புதுச்சேரியில் 31 மையங்களிலும் நடக்கும் இத்தேர்வில், ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். மாணவியர், மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர்.


தமிழகத்தில் ஏழு லட்சத்து 12 ஆயிரத்து 28 மாணவர்களும், புதுச்சேரியில் 11 ஆயிரத்து 517 மாணவர்களும் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் 33 ஆயிரத்து 858 மாணவர்கள் கூடுதலாக எழுதுகின்றனர். தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காதபடி கண்காணிக்கவும், மீறி நடந்தால் உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், 4,000 உறுப்பினர்கள் கொண்ட பல்வேறு பறக்கும் படை குழுக்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின்கீழ் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நேற்று துவங்கின.


எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை, எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள் எழுதுகின்றனர். புதுச்சேரியில், 15 ஆயிரத்து 529 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


மார்ச் 22ம் தேதி துவங்கும் மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,873 மாணவர்களும் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கும் தேதியில் இருந்து, ஓ.எஸ்.எல்.சி., தேர்வும் துவங்குகிறது. இத்தேர்வை, 1,561 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us