மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு தத்கலில் விண்ணப்பிக்கலாம்
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு தத்கலில் விண்ணப்பிக்கலாம்
UPDATED : மார் 05, 2011 12:00 AM
ADDED : மார் 05, 2011 10:30 AM
அ நிறம் | அளவு
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வெழுத தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை சென்னை மண்டல துணை இயக்குனர் விடுத்த செய்திக்குறிப்பு வருமாறு : மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவிருக்கும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வில் தனித்தேர்வர்களாக எழுத கடைசி தேதி வரை விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் முறையில் வரும் 14ம் தேதி முதல் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பங்களை சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில், உரிய வங்கி டி.டி.யுடன் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மற்றும் கூரியரில் பெறப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
