UPDATED : மார் 06, 2011 12:00 AM
ADDED : மார் 06, 2011 02:23 PM
சட்டம் படித்த ஒருவர், வழக்கறிஞராக பயிற்சி பெறுவதற்கான தகுதியை வழங்கக்கூடிய அனைத்திந்திய பார் தேர்வு(ஏ.ஐ.பி.இ) மார்ச் 6 -இல் நடந்தது.
இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்பட்ட இதுபோன்ற தேர்வில் ஏறக்குறைய 22000 பேர் பங்கேற்று எழுதினர். பகுப்பாய்வு திறன் மற்றும் சட்டம் பற்றிய அடிப்படை அறிவை சோதிக்கவே இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி மற்றும் பஞ்சாபி ஆகிய 11 மொழிகளில் நடத்தப்பட்டது.
விருப்ப முறையில் தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய 100 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகள் இந்திய பார் கவுன்சில் பரிந்துரைத்த பாடத்திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த தேர்வானது "திறந்த புத்தகம்" முறையிலானது. அதாவது தேர்வு எழுதும்போது படித்த புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் நிறைந்த கையேடுகளைப் பயன்படுத்தி எழுதலாம். அதேசமயம் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது.
