UPDATED : மார் 09, 2011 12:00 AM
ADDED : மார் 09, 2011 05:17 PM
பாரதிய வித்யாபீத் இன்ஜினியரிங்கிற்கான நுழைவுத் தேர்வு (பி.வி.பி.இ.இ.)
இந்தியாவில் பாரதிய வித்யாபீத் யூனிவர்சிட்டி மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுமார் 700 சேர்க்கை இடங்களுக்காக நடத்தப்படும் தேர்வினை அதிக அளவிலான மாணவர்கள் எழுதுகின்றனர். புனேயில் உள்ள இந்த யூனிவர்சிட்டியின் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல்கள் அடங்கிய புத்தகம் ரூ.1000க்குக் கிடைக்கும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 100 கேள்வியும், இயற்பியலில் 100 கேள்வியும் கேட்கப்படும். 11, 12ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, www.bharatividyapeeth.edu
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் (ஐ.ஐ.டி. - ஜே.இ.இ.)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தற்போது இந்தியா முழுவதும் 15 கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் சுமார் 9,000 சேர்க்கை இடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்திய மற்றும் அயல்நாடுகளின் கூட்டுத் தேர்வாக நடைபெறுகிறது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்ப ரூ.900 வசூலிக்கப்படும். விண்ணப்பப் படிவத்தை நேரடியாகப் பெற ரூ.1000 ஆகும்.
கல்வித் தகுதி : தகுதியுடைய பொதுத் தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வு மிகவும் கடினமான நுழைவுத் தேர்வாக கருதப்படுகிறது. இதில் இரண்டு கேள்வித் தாள்களுக்கு தலா 3 மணி நேரம் வழங்கப்படும். வேதியியல், கணிதம், இயற்பியல் பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் வகையிலான கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைப் பொறுத்து சேர்க்கை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு http://jee.iitd.ac.in
ஆல் இந்தியா அட்மிஷன் டெஸ்ட் (ஐ.ஐ.எஸ்.டி.)
இந்திய அரசு 2007ம் ஆண்டு உருவாக்கியதுதான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி). ஆசியாவின் முதல் வானியல் கல்வி நிலையம் என்ற பெருமையும், உலக அளவில் வானியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, வானியலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி நிலையம் என்ற பெருமையும் பெறுகிறது.
ஐ.ஐ.எஸ்.டி., பி.டெக். படிப்பிற்கான சேர்க்கைக்கு ஆல் இந்தியா அட்மிஷன் டெஸ்டினை (ஐசாட்) நடத்துகிறது. தகவல் புத்தகம் மற்றும் விண்ணப்பப் படிவம் ரூ.600க்கு கிடைக்கும். 2011ல் பி.டெக். வகுப்பில் சேர 156 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்புத் தேர்விலும் 70% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
தேர்ந்தெடுக்கும் முறை : வேதியியல், கணிதம், இயற்பியல் பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் வகையிலான கேள்விகள் கேட்கப்படும். ரேங்க் பட்டியல் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிடி, ஓபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியாக தயாரிக்கப்படும். தகுதியுடைய மாணவர்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு www.iist.ac.in/isat2011 இணைய தளத்தை பார்க்கவும்.
காருண்யா யூனிவர்சிட்டி என்ஜினியரிங் என்ட்ரன்ஸ் (கே.இ.இ.)
காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் சேர 1400 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவம் ரூ.750க்கு கிடைக்கிறது.
கல்வித் தகுதி : பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான பொதுத் தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், தனியாக கணிதத்தில் 60% மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.
தேர்ந்தெடுக்கும் முறை : நுழைவுத் தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும். 11, 12வது பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். தேர்வு முடிவு வெளியானதும் காருண்யா யூனிவர்சிட்டியில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். சேர்க்கை அனைத்தும் காருண்யா நுழைவுத் தேர்வின் ரேங்க் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு www.karunya.edu இணைய தளத்தை பார்க்கவும்.
இதன் அடுத்த தொடர்ச்சி வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.
