ஒரு பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்திற்கு அதிக விளம்பரம்
ஒரு பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்திற்கு அதிக விளம்பரம்
UPDATED : மார் 09, 2011 12:00 AM
ADDED : மார் 09, 2011 01:14 PM
இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்வளவு உதவித்தொகை என்ற ஒதுக்கீடு உள்ளது. கடந்த 2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதிக பிரபலமடையாத இந்த திட்டத்திற்கு ஒரு வலுவான விதிவிலக்கை, மனிதவளத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எடுத்துள்ளது. இந்த திட்டமானது நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் நன்கு பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன்மூலம்தான் பெண் குழந்தைகளை உயர்கல்விக்கு அனுப்ப மக்களை ஊக்குவிக்க முடியும் என்றும் அந்த கமிட்டியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்ற யு.ஜி.சி., இந்த திட்டத்தை நன்றாக விளம்பரப்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்கும் கல்லூரிகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் நாடு முழுவதற்கும் ஒரு வருடத்திற்கு மொத்தம் 1200 உதவித்தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
