தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் பயிற்சியாளர்கள்

எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் பயிற்சியாளர்கள்

எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் பயிற்சியாளர்கள்


UPDATED : மார் 10, 2011 12:00 AM

ADDED : மார் 10, 2011 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2011 12:00 AM ADDED : மார் 10, 2011 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எச்.எல்.எல்., லைப்கேர் லிமிடெட் இந்திய அரசின் மினிரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தை தலைமையகமாகக் கொண்டு ஹெல்த்கேர் தொடர்புடைய பல்வேறுபட்ட பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் கிராஜூவேட் டிரெய்னிக்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


தகுதிகள்
எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தின் கிராஜூவேட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 200506 கல்வியாண்டு முதல் 200910 கல்வி ஆண்டிற்குள் இயற்பியல், வேதியியல் அல்லது கணிதம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும்.


ஊதியம் எப்படி
எச்.எல்.எல்., நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதல் ஆண்டில் மாதம் ரூ.4 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.5 ஆயிரமும், மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.6 ஆயிரமும் ஸ்டைபண்டாகப் பெறலாம்.


விண்ணப்பிப்பது எப்படி
கல்வி மற்றும் வயது தகுதி பெற்று மேற்கண்ட பதவி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் ரெஸ்யூமுடன், கல்வித்தகுதி, ஜாதி, பணிஅனுபவ சான்றிதழ் நகல்களுடன் தங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படத்தை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 16.03.2011க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Name of the Post Applied for : Graduate Trainees (Physics / Chemistry / Mathematics) and Code No of the Post : HL/HR/01/2011" என்று குறிப்பிட வேண்டும்.


முகவரி
Manager (HR),
HLL Lifecare Limited,
Peroorkada Factory,
Thiruvananthapuram - 5.


விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 16.03.2011
இணையதள முகவரி : ""
www.lifecarehll"

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us