தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...


UPDATED : மார் 10, 2011 12:00 AM

ADDED : மார் 10, 2011 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2011 12:00 AM ADDED : மார் 10, 2011 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகி விட்டன. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளும் சூடு பிடிக்கின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தப்பித்து, எப்படி தேர்வை அணுகுவது என்பதைக் காண்போம்.


* வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வு வாய்ப்பு ஒருமுறைதான் கிடைக்கும். ஆனால் உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரும்.


* படிப்பதிலேயே தினமும் கவனம் செலுத்துங்கள். கடைசி நேரத்தில் படிப்பது, மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.


* படிக்கும் நேரத்தில், கிரிக்கெட் போட்டிகளை நினைக்காதீர்கள். இதனால் கவனம் சிதறும். படிப்பில் முழு மனதுடன் ஈடுபட முடியாது.


* கிரிக்கெட் போட்டிகளின் இடைவெளியின் போது மட்டும் "ஸ்கோரை' தெரிந்து கொள்ளுங்கள். இதை பழக்கப்படுத்திக் கொண்டால் கிரிக்கெட் போட்டிகள், உங்கள் படிப்பை பாதிக்காது.


* போட்டிகளை "டிவியில் காண்பதை, கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். போட்டிகளை காண்பது, உங்களை பெரிதும் பாதிக்கும்.


* போட்டிகளின் "ஸ்கோரை' தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டாதீர்கள். இதனால் படிக்கும் மனநிலை குறையும்.


* தேர்வுக்கு தயாராவதிலேயே முழு கவனத்தையும் செலுத்துங்கள். தேர்வு தான் உங்கள் வாழ்க்கையை முன்னேறச்
செய்யும் என்பதை மனதில் கொண்டு படியுங்கள்.


* தேர்வை விட கிரிக்கெட் தொடர் ஒன்றும் முக்கியமானதல்ல. தற்போது தவறு செய்து விட்டு பின் வருந்துவதில் பயனில்லை.


* மகிழ்ச்சியுடன் தேர்வை அணுகுங்கள். அதுதான் நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது. மாணவர்கள் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வாழ்த்துக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us