UPDATED : மார் 10, 2004 12:00 AM
ADDED : மார் 10, 2011 01:06 PM
அ நிறம் | அளவு
மனிதவளத் துறை அமைச்சகமும், பணியாளர் மற்றும் பயிற்சி துறையும் இணைந்து, மாநில மதரசா வாரியங்களின் தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மதரசாக்களுக்கான இந்த அந்தஸ்து அந்தந்த மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்டுள்ளது. மதரஸாக்களின் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியானது, சி.பி.எஸ்.இ, இந்திய பள்ளி கல்வி வாரிய கவுன்சில்(சி.ஓ.பி.எஸ்.இ) மற்றும் பிற பள்ளி கல்வி வாரியங்கள் ஆகியவற்றுக்கு சமமான அந்தஸ்தை பெற்றுள்ளது. மதரசாக்களில் படிப்பவர்கள் உயர்கல்வியை எளிதில் பெறவும், சுலபமான வேலைவாய்ப்பை பெறவும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
