தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்பை உயர்நீதி மன்றத்தில் கிளரிகல் பதவி

மும்பை உயர்நீதி மன்றத்தில் கிளரிகல் பதவி

மும்பை உயர்நீதி மன்றத்தில் கிளரிகல் பதவி


UPDATED : மார் 10, 2011 12:00 AM

ADDED : மார் 10, 2011 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2011 12:00 AM ADDED : மார் 10, 2011 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாக்பூர் மும்பை உயர்நீதி மன்றத்தில் கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முழு நேரப் பணியான இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
மும்பை உயர் நீதி மன்ற கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகள் தேவை : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சட்டப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆங்கில டைப்ரைட்டிங்கில் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை டைப் செய்யும் திறனும், இதற்கு ஆதாரமான அரசு வழங்கிய சான்றிதழும் தேவை. டி.ஓ.இ.ஏ.சி.சி., சி.டி.ஏ.சி., அல்லது பல்கலைக்கழகம் மூலமாக குறைந்த பட்சம் 6 மாத காலத்திற்கு கம்ப்யூட்டர் தொடர்புடைய டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி
மும்பை உயர் நீதி மன்ற கிளரிகல் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் ரூ.50/க்கான போஸ்டல் ஆர்டரை "Registrar, High Court Bench at Nagpur " என்ற பெயரில் இணைக்க வேண்டும். மேலும், சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவரையும் இத்துடன் இணைக்க வேண்டும். இவற்றை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the post of Clerk" என்று குறிப்பிட்டு பின் வரும் முகவரிக்கு 07.03.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி
The Registrar,
High Court of Bombay,
Nagpur Bench, Civil Lines,
Nagpur.


விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 07.03.2011

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us