தொழிற்கல்வி குறித்து கபில் சிபல்-மலேசிய துணைப் பிரதமர் பேச்சு
தொழிற்கல்வி குறித்து கபில் சிபல்-மலேசிய துணைப் பிரதமர் பேச்சு
UPDATED : மார் 12, 2011 12:00 AM
ADDED : மார் 12, 2011 11:57 AM
அ நிறம் | அளவு
புதுடெல்லியில் நேற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், மலேசிய துணைப் பிரதமர் டான் ஸ்ரீ முயிதின் மொஹமது யாசினை சந்தித்துப் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் தேசிய அளவிலான தொழிற்கல்வித் தகுதியை உருவாக்குவதற்கான பணிகள் குறித்து அமைச்சர் கபில் சிபல், மலேசிய துணைப் பிரதமரிடம் விளக்கிக் கூறினார்.
தேசிய அளவிலான தொழிற்கல்வி 9 நிலைகளைக் கொண்டதாக அமையும். மேலும், எந்த நிலையிலும் பொதுக் கல்விப் பிரிவிற்கு மாறிக் கொள்ளும் வகையில் இந்த தொழிற்கல்வி அமையும் என்று கபில் சிபல் கூறினார்.
தொழிற்கல்வியை உருவாக்குவது மிகவும் சிறந்ததாக உள்ளது என்று மலேசிய துணைப் பிரதமர் கூறினார்.
