தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 2 தேர்வுக்கு செய்தித்தாள் முக்கியம்

குரூப் 2 தேர்வுக்கு செய்தித்தாள் முக்கியம்

குரூப் 2 தேர்வுக்கு செய்தித்தாள் முக்கியம்


UPDATED : மார் 13, 2011 12:00 AM

ADDED : மார் 13, 2011 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2011 12:00 AM ADDED : மார் 13, 2011 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு


செய்தித்தாள்களை அன்றாடம் படித்தால், குரூப் 2 தேர்வில் உறுதியாக வெற்றி பெறலாம் என மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.


தினமலர் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாம் மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நடந்தது. பொதுஅறிவு பாடம் குறித்து வெங்கடாச்சலம் பேசியதாவது, "பொதுவாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் கேள்வித்தாளின் கடினத்தன்மையைப் பொறுத்து தேர்வில் "கட் ஆப்" மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். இதில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் போதுமென நினைக்க முடியாது.


பெரும்பான்மையான கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே தேர்வு பட்டியலில் இடம்பெற முடியும். குரூப் 2 வைப் பொறுத்தவரை பொது அறிவு 100, பொதுத்தமிழ் 100 என 200 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். விடை தெரியாவிட்டாலும் விடைக்குரிய காலத்தை கண்டிப்பாக நிரப்பவேண்டும். குரூப் 2 தேர்வின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது அறிவியல், கணித கேள்விகள் தான். இதில் பெரும்பான்மை மதிப்பெண் பெற்றால் தேர்வில் வெற்றி உறுதி. தினமும் செய்தித்தாள்களை படித்து, குறிப்பெடுத்துக் கொண்டால் வெற்றி பெறலாம்" என்றார்.


முனைவர் ராஜ்மோகன் பொதுத்தமிழ் குறித்து பேசியதாவது, "பொதுத்தமிழ் மட்டுமல்லாமல், பொதுஅறிவு வினாவில் இருந்து 20 கேள்விகள் உட்பட மொத்தம் 120 கேள்விகள் தமிழில் இருந்து கேட்கப்படுகிறது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான செய்யுட் பகுதி, உரைநடை புத்தகம், எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரையான பைந்தமிழ் இலக்கண புத்தகம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத்தமிழ் புத்தகத்தை படிக்க வேண்டும், தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச் சொல் அகராதி புத்தகத்தை படிக்க வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us