UPDATED : மார் 13, 2011 12:00 AM
ADDED : மார் 13, 2011 04:07 PM
இந்திய லாஜிஸ்டிக் கல்வி நிறுவனம், லாஜிஸ்டிக் மற்றும் ஷிப்பிங் துறையில் மகளிர் எக்சிகியூடிவ் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த துறையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வை அதிகரித்து, இதில் உள்ள வேலைவாய்ப்பை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த புதிய படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பவுண்டேஷன் டிப்ளமோ படிப்பாகும். இப்படிப்பில் 99 நாட்களுக்கான வகுப்பறை அமர்வுகளும், 4 வாரங்கள் தொழிற்சாலைகளுக்கு செல்லும் அம்சங்களும் உண்டு. தொழிற்சாலை செல்லுதல் என்பது கல்வி நிறுவனத்தின் ஏற்பாடாகும். மேலும் கல்லூரிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஊக்குவிக்கப்படும்.
பட்டதாரிகள் அல்லது முதல் இரண்டு வருட தேர்வுகளில் 60% மதிப்பெண்கள் எடுத்து தற்போது மூன்றாம் வருடம் படிப்பவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நல்ல தகவல் தொடர்பு திறனும் பெற்றிருக்க வேண்டும். ரூ.40 ஆயிரம் படிப்பிற்கான கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
