தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேமராக்கள் பொருத்த டெல்லி பல்கலை வலியுறுத்தல்

கேமராக்கள் பொருத்த டெல்லி பல்கலை வலியுறுத்தல்

கேமராக்கள் பொருத்த டெல்லி பல்கலை வலியுறுத்தல்


UPDATED : மார் 14, 2011 12:00 AM

ADDED : மார் 14, 2011 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2011 12:00 AM ADDED : மார் 14, 2011 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லியில் கடந்த வாரம் கல்லூரி மாணவி ராதிகா தன்வார் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அனைத்துக் கல்லூரிகளிலும் தொலைக்காட்சியுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி பாதுகாப்பை அதிகரிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.


கல்லூரி வளாகங்களில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என்று டெல்லி காவல்துறை ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் இதனைக் கூறியுள்ளது.


டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே டெல்லி காவல்துறை, கல்லூரி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது பாதுகாப்பிற்கு நல்லது என்று ஆலோசனைக் கூறி கடிதம் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகங்களில் கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி எல்லா கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.


கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, மாணவர்களின் பாதுகாப்பிற்கும்,  அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தாலும், அது குறித்து விசாரிக்கவும் உதவும்.


மேலும், கல்லூரிகளில் கேமராக்களை அமைக்கத் தேவையான நிதி உதவியை அளிக்கவும் டெல்லி பல்கலைக்கழகம் தயாராக உள்ளது.


கல்லூரிகளுக்கு மட்டும் அல்லாமல், கல்லூரி விடுதிகளுக்கும் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும்.


சில கல்லூரிகள், கண்காணிப்புக் கேமராக்களை ஏற்கனவே பொருத்தியுள்ளன. சில தற்போது பொருத்துவதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாக பதில்கள் வந்துள்ளன என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us