தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கூடுதல் இடங்கள்

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கூடுதல் இடங்கள்

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கூடுதல் இடங்கள்


UPDATED : மார் 15, 2011 12:00 AM

ADDED : மார் 15, 2011 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2011 12:00 AM ADDED : மார் 15, 2011 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"வரும் கல்வியாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி கோரி, நாடு முழுவதும் இருந்து 84 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன" என இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாகக் குழு தலைவர் சிவக்குமார் செரீன் கூறினார்.


இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தொழில் கல்வி படிக்க விரும்புவோர் மத்தியில் எம்.பி.பி.எஸ். பட்ட படிப்புக்கு முக்கிய இடமுண்டு. வரும் கல்வியாண்டில், புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்க அனுமதி கோரி, நாடு முழுவதும் இருந்து 84 விண்ணப்பங்களும், மருத்துவ முதுநிலைப் பட்ட படிப்பில் இடங்களை அதிகரிக்க கோரி 3,000 விண்ணப்பங்களும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்தியளவில் டாக்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்கும் அவசியமும் உள்ளது. தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி ஆகியவற்றில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் 100 இடங்களை அதிகரிக்க விண்ணப்பித்துள்ளது.


தமிழக அரசும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பில் கூடுதலாக 100 இடங்களில் மாணவர்களை சேர்க்க, அனுமதி கோரியுள்ளது. எம்.பி.பி.எஸ்., பாடத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக, ஒரே மாதிரியாக தான் உள்ளது. சர்வதேச அளவில் திறமையான டாக்டர்களை உருவாக்கும் வகையில், இப்பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு சிவக்குமார் செரீன் கூறினார்.


தமிழகத்தில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,945 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மேலும் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us