UPDATED : மார் 15, 2011 12:00 AM
ADDED : மார் 15, 2011 02:48 PM
பஞ்சாப் போலீசில் ஐ.டி., ஆபரேட்டர், கம்ப்யூட்டர் பிரிவில் 100 கான்ஸ்டபிள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன ? : பஞ்சாப் போலீசின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 01/01/2011 அன்று 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இது தவிர பின் வரும் கல்வித் தகுதி ஏதாவது ஒன்றும் தேவைப்படும்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி அமைப்பின் மூலமாக +2விற்கு நிகரான படிப்பை முடித்து அதன் பின் ஒரு ஆண்டு காலம் படிக்கக் கூடிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அஸிஸ்டெண்ட் படிப்பை ஐ.டி.ஐ., மூலமாக முடித்திருக்க வேண்டும். மெட்ரிக் அளவிலான படிப்பை முடித்த பின் பாலிடெக்னிக் கல்லூரி மூலமாக மூன்றாண்டு காலம் படிக்கக் கூடிய டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்த பின் டி.ஓ.இ.ஏ.சி.சி., அங்கீகாரம் பெற்ற 'ஓ' அளவிலான கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது + 2விற்குப் பின் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற ஒரு வருட கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை ஹார்டுவேர், சாப்ட்வேர், நெட் ஒர்க்கிங், வெப் டெக்னாலஜிஸ், சர்வர் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
பி.எஸ்.சி., (ஐ.டி.,) பி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பஞ்சாப் மொழியை மெட்ரிக் படிப்பு அளவில் படித்திருப்பது கூடுதல் தேவை என்று அறிவிக்கப்பட்டாலும், இம்மொழி தெரியாதவர்கள் பணி கிடைத்து ஒரு வருடத்திற்குள் பஞ்சாப் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் தகுதி
பஞ்சாப் போலீசின் கான்ஸ்டபிள் பதவிக்கு ஆண்களுக்கு 5 அடி 5 அங்குலமும், பெண்களுக்கு 5 அடி 1 அங்குலமும் குறைந்த பட்ச உடல் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை
பஞ்சாப் போலீசின் ஐ.டி., பிரிவு கான்ஸ்டபிள் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
பஞ்சாப் போலீசின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க ரு.150/க்கான் டி.டி.,யை Chairman Recruitment Board (IT & T) Punjab என்ற பெயரில் சண்டிகாரில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து டி.டி., மற்றும் தேவைப்படும் சான்றிதழ் நகல்களை இணைத்து பின் வரும் முகவரிக்கு 04.04.2011க்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.
முகவரி
Inspector General of Police cum Chairman Recruitment Board
(IT & T Wing),
Punjab Police Head Quarters,
Sector 9, Chandigarh.
