UPDATED : மார் 16, 2011 12:00 AM
ADDED : மார் 16, 2011 10:55 AM
ட்ரை-வேலி பல்கலை விவகாரத்தில் ரேடியோ காலர் மாட்டப்பட்ட 18 இந்திய மாணவர்களில், 12 பேரின் ரேடியோ காலர்கள் அகற்றப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ட்ரை-வேலி பல்கலை விவகாரம், வெளிநாட்டு படிப்பை விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. ரேடியோ காலர் மாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட இந்திய மாணவர்களிடமிருந்து அவை அகற்றப்பட வேண்டும் என்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனவே தற்போது மொத்தம் 18 பேரில், 12 பேரின் ரேடியோ காலர்கள் நீக்கப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் கமிஷன்(என்.எச்.ஆர்.சி) கூறியுள்ளது.
இந்த கமிஷன் ட்ரை-வேலி விவகாரம் சம்பந்தமாக, இந்திய வெளியுறவு துறைக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டிசுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், 12 மாணவர்களிடம் ரேடியோ காலர் நீக்கப்பட்ட விஷயத்தை தெரிவித்தது. மேலும் எஞ்சிய மாணவர்களிடமும் விரைவில் ரேடியோ காலர்கள் நீக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
