UPDATED : மார் 16, 2011 12:00 AM
ADDED : மார் 16, 2011 03:33 PM
மகளிருக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு கண்காட்சி வரும் மார்ச் 19 ம் தேதி சென்னையில் நடக்கிறது.
சதர்லேன்ட் மற்றும் அக்சன்ஜர் நிறுவனங்களுடன் இணைந்து "த ஹிந்து", இந்த கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சியில் 25 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 7500 -க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
எச்.சி.எல்., விப்ரோ, போர்ட் டெக்னாலஜி சர்விசஸ் இந்தியா, எல் அண்ட் டி இன்போடெக் மற்றும் ஸ்டேண்டர்ட் சார்டர்ட் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. முழு நேர, பகுதி நேர மற்றும் விருப்ப நேர, ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் இந்த கண்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட உள்ளன.
பொறியியல், மார்கெடிங், நிதி, அக்கவுண்டிங், அலுவலக மேலாண்மை, மனித வளம்(எச்.ஆர்), தகவல் தொழில்நுட்பம், ஜர்னலிசம் போன்ற பல துறைகளில் மகளிருக்கான வேலைவாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட உள்ளன.
