தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உரிமை சட்ட செயல்பாட்டில் மத்திய அரசு அக்கறை

கல்வி உரிமை சட்ட செயல்பாட்டில் மத்திய அரசு அக்கறை

கல்வி உரிமை சட்ட செயல்பாட்டில் மத்திய அரசு அக்கறை


UPDATED : மார் 17, 2011 12:00 AM

ADDED : மார் 17, 2011 02:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2011 12:00 AM ADDED : மார் 17, 2011 02:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கல்வி உரிமை சட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்பட மத்திய அரசு 65% நிதியை ஒதுக்கியுள்ளது.


கல்வி உரிமை சட்டம் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2014-15 ம் ஆண்டு வரை சிறப்பாக செயல்படுவதற்கு மத்திய அரசு 65% நிதியை ஒதுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் 35% நிதியை ஒதுக்கும்.


ஆனால் பல மாநில அரசுகள், கல்வி உரிமை சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் 90:10 என்ற அளவில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. கல்வி உரிமை திட்டம் சம்பந்தமாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி பங்கீடானது, 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலைப் பொறுத்து மாறும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.


எனவே அடுத்த 5 வருடங்களுக்கு நிதி பங்கீடு விகிதங்கள் மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 65:35 என்ற அளவிலேயே பங்கீட்டு விகிதம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2001 கணக்கின்படி, 2 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. 2005 ம் ஆண்டு கணக்கின்படி 1.34 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அதேசமயம் 2009 ம் ஆண்டு கணக்கின்படி 81 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us