திறந்தநிலை பல்கலை பட்டம் முறையாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்
திறந்தநிலை பல்கலை பட்டம் முறையாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்
UPDATED : மார் 18, 2011 12:00 AM
ADDED : மார் 22, 2011 01:15 PM
திறந்தநிலை பல்கலையின் பட்டமானது, நேரடியாக படித்தோ, தொலைநிலை கல்வி மூலமாகவோ வாங்கும் பட்டங்களுக்கு இணையாகாது என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்துள்ள ஐகோர்ட், "எந்தந்த கல்வி பட்டங்கள் தரமானவை என்ற அறிவு கல்வியாளர்களுக்கு உண்டு. கல்வியாளர்களின் முடிவில் சட்டப் பிரிவு 226 -ன் பிரகாரம் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் கல்வி விஷயத்தில் தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே கோர்ட் தலையிட வேண்டும். ஏனெனில் அதைப் பற்றிய அறிவு கோர்ட்டுக்கு குறைவு என்று ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் எச்சரித்துள்ளது" என்று தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பென்ச் கூறியுள்ளது.
சமீபத்தில் வெளியான அரசு ஆணையின்படி, 10 மற்றும் 12 ம் வகுப்புகளை முடித்தப் பிறகு(அதாவது, முறையான பள்ளி கல்வியை) திறந்தநிலை பல்கலைக்கழங்களில் வாங்கும் இளநிலை/முதுநிலை மற்றும் டிப்ளமோ பட்டங்கள்தான், பொதுத்துறை பணிகளில் ஒருவரை சேர்க்க மற்றும் அவருக்கு பதவி உயர்வு அளிப்பதற்காக மதிப்பிடப்படும்.
எனவே முறையான பள்ளி கல்வி தகுதியில்லாமல் ஒருவர் திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் வாங்கியுள்ள பட்டங்கள் பணி நியமனத்திற்கோ, பதவி உயர்வுக்கோ பயன்படாது என்று தெரிவித்திருந்தது. இந்த அரசு ஆணையை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாகத்தான் ஐகோர்ட் இவ்வாறு தெரிவித்துள்ளது.
