தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளமையாக வாழ தோட்டம் வளர்க்கவும்

இளமையாக வாழ தோட்டம் வளர்க்கவும்

இளமையாக வாழ தோட்டம் வளர்க்கவும்


UPDATED : மார் 19, 2011 12:00 AM

ADDED : மார் 19, 2011 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2011 12:00 AM ADDED : மார் 19, 2011 03:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தோட்ட வளர்ப்பில் ஆர்வம் செலுத்தினால் இளமையாகவும், சந்தோஷமாகவும் உணரலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


இந்த ஆய்வு பல சுவாரஸ்யமான தகவல்களை தருகிறது. அதன்படி, ஐம்பது வயதுக்கு மேற்பட்டவராக இருக்கும் ஒருவர் தோட்ட வளர்ப்பில் ஈடுபடுகையில், வாழ்விற்கான உற்சாகத்தைப் பெறுகிறார். அதேசமயம் தோட்டம் இல்லாதவர் அந்த உற்சாகத்தைப் பெறுவதில்லை.


தோட்டம் வளர்ப்பவர்கள் வாழ்க்கையில் நேர்மறை எண்ணம் உள்ளவர்களாகவும், வாழ்வில் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும் உள்ளனர். தோட்ட வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடமும், ஈடுபடாதவர்களிடமும் கேட்கையில், தோட்டம் வளர்ப்பவர்கள் 71% பேர் தாங்கள் முதுமையில் இருப்பதாக உணரவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் அதேசமயம் தோட்டம் வளர்க்காதவர்களில் வெறும் 57% மட்டுமே அவ்வாறு தெரிவித்தனர்.


மேலும் தோட்டம் வளர்ப்பவர்கள் அதிக ஆற்றலுடனும், சுறுசுறுப்புடனும், சிந்தனை அளவில் உற்சாகத்துடனும் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையை திருப்தியாக உணர்வதுடன், அவர்களுக்கு பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும் வாய்ப்புகளும் கிடைக்கிறது.


மேலும் தோட்ட வளர்ப்பு பழக்கமானது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், வாழ்வின் தரம் உயர்தலுக்கும் பயன்படுகிறது" என்ற பலவாறான தகவல்களை அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us