UPDATED : மார் 20, 2011 12:00 AM
ADDED : மார் 20, 2011 10:44 AM
பள்ளி மேல்நிலைப் பாடத்தில், மானுடவியல் பிரிவில், சட்டத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தும்படி மத்திய மனிதவள அமைச்சகத்தை, இந்திய பார் கவுன்சில் வற்புறுத்தி உள்ளது.
முதன்முதலாக நடத்தப்பட்ட ஏ.ஐ.பி.இ. தேர்வு முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பி.சி.ஐ. தலைவர் கோபால் சுப்பிரமணியம், "இந்த விஷயம் மனிதவள அமைச்சகம் மற்றும் சி.பி.எஸ்.இ. ஆகியவற்றிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அது கலந்தாய்வு நிலையிலேயே உள்ளது.
10 மற்றும் 12 ம் வகுப்புகளில் சட்டம் என்பது ஒரு விருப்பப் பாடமாக, மானுடவியல் படிப்புகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். இதுதொடர்பாக மனிதவள அமைச்சகத்திடம் விவாதித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள் தொழிலுக்காக பதிவுசெய்தல் மற்றும் சட்டத் தொழிலின் நெறிமுறைகளை வகுத்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்வதற்கு அதிகாரம் பெற்ற உச்ச அமைப்பு பி.சி.ஐ. என்பது குறிப்பிடத்தக்கது.
