UPDATED : மார் 21, 2011 12:00 AM
ADDED : மார் 21, 2011 09:58 AM
"ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளித்தால், வேலைவாய்ப்பை எளிதாக பெறலாம்&'&' என, சங்கரா கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் பேசினார்.
சரவணம்பட்டி சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் 21வது ஆண்டு விழா நேற்று நடந்தது.விழாவில், சங்கரா மேலாண்மைக் கல்லூரியின் முதல்வர் முருகேஷன் வரவேற்றார். அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தார்.
கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.செந்தில் குழுமங்களின் தலைவர் ஆறுமுகசாமி பேசுகையில், "மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற விடாமுயற்சி, தனிமனித ஒழுக்கம், கல்வி மூன்றும் அவசியம். கல்வியோடு சாதிக்க விரும்பும் துறையில் அனுபவம் தேவை. கல்வி இருந்தால் மட்டுமே எதையும் புரிந்து கொள்ள முடியும். கல்வி, மருத்துவ சேவைகள் கடந்த காலங்களில் இலவசமாக வழங்கப்பட்டன. அந்த நிலை மாறி கல்வி, மருத்துவம் இரண்டும் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டன. பொதுத் தேர்வில் 95% எடுக்கும் மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கம் கல்வியை, விரும்பும் கல்லூரியில் படிக்க முழுக் கட்டணமும் விஜய லட்சுமி அறக்கட்டளை வழங்கி வருகிறது,&'&' என்றார்.
கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் பேசுகையில்,""மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவது அவசியம். ஆங்கிலத்தில் நாட்டம் இல்லாமல் பலர் வேலைவாய்ப்பை தவற விடுகின்றனர். ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளித்தால்,வேலை வாய்ப்பை எளிதாக பெறலாம். படிப்பை முடித்து வெளியில் செல்லும் மாணவர்கள் நல்ல மனிதனாக, பெற்றோரை மதித்து, நல்ல குடிமகன்களாக வரவேண்டும்&'&' என்றார்.
கல்லூரியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
