தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரமில்லா கல்வி நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியாது

தரமில்லா கல்வி நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியாது

தரமில்லா கல்வி நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியாது


UPDATED : மார் 21, 2011 12:00 AM

ADDED : மார் 21, 2011 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2011 12:00 AM ADDED : மார் 21, 2011 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"கல்விச்சேவையில் தரமில்லாத கல்வி நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியாது" என, கல்லூரி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.


கோவை, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில், "உயர்கல்வி நிறுவனங்களில் தரச்சேவையை மேம்படுத்துதல்" என்ற கருத்தரங்கு நடந்தது. கல்லூரிச் செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார்.


பாரதியார் பல்கலை, கல்லூரி மேம்பாட்டு குழும தலைமை பொறுப்பாளர் மனோகரன் பேசியதாவது:உயர்கல்வி நிறுவனங்கள் தரமான சேவை மூலம் மாணவர்களை திருப்திப்படுத்த வேண்டும். சிறந்த பேராசிரியர்கள், நவீன கற்பித்தல் முறை, உள்கட்டமைப்பு, புதிய பட்டப்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு மூலம் தரச்சேவையை மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கல்வி நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியாது. உலகமயமாக்கல் காரணமாக பல வெளிநாட்டு பல்கலைகள் நமது நாட்டுக்குள் வந்துள்ளன. அவற்றின் வருகை இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. தற்போதைய சூழலில் ஏற்றுமதி, இறக்குமதி என்ற நிலையை கல்வி அடைந்துள்ளது. மாணவர்களை திருப்திபடுத்தாவிட்டால் தரமில்லாத கல்வி நிறுவனங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். எனவே, கல்விச்சேவையின் தரத்தை உயர்கல்வியில் மேம்படுத்துவது கட்டாயமாகும்.இவ்வாறு, மனோகரன் பேசினார்.


கருத்தரங்கில், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us