தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ. பயில விரும்பும் மாணவர்களுக்கானது

எம்.பி.ஏ. பயில விரும்பும் மாணவர்களுக்கானது

எம்.பி.ஏ. பயில விரும்பும் மாணவர்களுக்கானது


UPDATED : மார் 21, 2011 12:00 AM

ADDED : மார் 21, 2011 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2011 12:00 AM ADDED : மார் 21, 2011 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

என்.எம்.ஏ.டி.
தங்களது கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. பாடப்பிரிவிற்கு மாணவர்களைத் தேர்வு செய்ய நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1650.


கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை : கம்ப்யூட்டர் அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்வில் சரியான பதில்களை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் அமையும். இது 2 மணி நேர தேர்வாகும். மொழித் திறன், க்வான்டிடேட்டிவ் ஸ்கில், டேட்டா இன்டர்பிரிடேஷன் மற்றும் டேட்டா சபிசியன்சி, லாஜிகல் ரீசனிங் ஆகிய பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும்.


நுழைவுத் தேர்வு மதிப்பெண், குழு கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு போன்ற சுற்றுகளில் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு இறுதித் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


மேலும் விவரங்கள் அறிய www.nmims.edu


சிம்பியாசிஸ் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட்
சிம்பியாசிஸ் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட், சிம்பியாசிஸ் சர்வதேச யூனிவர்சிடியின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து நடத்தப்படுகிறது. விண்ணப்பப் படிவம் ரூ.1550க்கு கிடைக்கும். மாணவர்கள் சிம்பியாசிஸ் கல்லூரிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.


தேர்வு முறை : அப்ஜெக்டிவ் கேள்விகள் கொண்டதாக இருக்கும் இந்த தேர்வினை எழுத 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 25% மதிப்பெண் வழங்கப்படும். பொது ஆங்கிலம், க்வான்டிடேட்டிவ் ஆப்டிடியூட், பொது விழிப்புணர்வு, லாஜிகல் அன்ட் அனலைடிகல் ரீசனிங் போன்ற பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சியாகும் மாணவர்கள் அடுத்த சுற்றுகளுக்கு அழைக்கப்படுவார்கள்.


மேலும் விவரங்கள் அறிய www.snaptest.org


எக்ஸ்.ஏ.டி.
மேனேஜ்மென்ட் படிப்பிற்காக அகில இந்திய அளவில் எக்ஸ்.எல்.ஆர்.ஐ. நடத்தும் நுழைவுத் தேர்வுதான் எக்ஸ்.ஏ.டி. 70க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் எக்ஸ்.ஏ.டி. தேர்வு முடிவை தங்களது மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. சுமார் 33 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தகவல் புத்தகமும், விண்ணப்பமும், 900 ரூபாயாகும். சில முக்கிய கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வு முடிவை ஏற்றுக் கொள்கின்றன.


கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை : 3 பிரிவுகளைக் கொண்டதாக இந்த தேர்வு உள்ளது. இந்த தேர்விற்கு 2 மணி நேரம் அளிக்கப்படுகிறது. தேர்வு முடிந்ததும் 20 நிமிடங்களில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஏதேனும் 3 பாடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். அதிக பாடங்களுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நேர்முகத் தேர்வு / குழு கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தேர்வு முறையும், கட்-ஆப் மதிப்பெண்களும் மாறுபடும்.


மேலும் விவரங்கள் அறிய www.xlri.net.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us