தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக். - ஆங்கிலோ இந்திய தேர்வுகள் துவங்கின

மெட்ரிக். - ஆங்கிலோ இந்திய தேர்வுகள் துவங்கின

மெட்ரிக். - ஆங்கிலோ இந்திய தேர்வுகள் துவங்கின


UPDATED : மார் 22, 2011 12:00 AM

ADDED : மார் 22, 2011 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2011 12:00 AM ADDED : மார் 22, 2011 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய தேர்வுகள் முடிந்ததையடுத்து, மெட்ரிக். மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் இன்று துவங்கின. ஒன்றரை லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


கடந்த 2ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வில் நேற்றுடன் கணிதம், அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாட தேர்வுகள் முடிந்து விட்டன. நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்தன. உயிரியல் தேர்வில் மூன்று மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.


தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக மாநிலம் முழுவதும் உயிரியல் தேர்வில் ஏழு மாணவர்களும், வரலாறு பாடதேர்வில் 10 மாணவர்களும், தாவரவியல் தேர்வில் இரண்டு மாணவர்களும் என மொத்தம் 19 பேர் பறக்கும் படை குழுவினரிடம் பிடிப்பட்டனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நாளை நடக்கிறது. 25ம் தேதியுடன் தேர்வுகள் முடியும் நிலையில், மெட்ரிக். - ஆங்கிலோ இந்திய பொதுத்தேர்வுகள் இன்று துவங்கின.


மெட்ரிக். தேர்வை 3,240 பள்ளிகளில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 252 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 79 ஆயிரத்து 794 பேர் மாணவர்கள். 65 ஆயிரத்து 458 பேர் மாணவியர். சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 124 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். புதுச்சேரியில் 1,432 மாணவர்கள் எழுதுகின்றனர். ஆங்கிலோ இந்திய தேர்வை 42 பள்ளிகளில் 4,873 மாணவர்கள் எழுதுகின்றனர்.


இவர்களில் சென்னையில் மட்டும் 2,302 பேர் எழுதுகின்றனர். இரண்டு தேர்வுகளும் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கின்றன. பெரும்பான்மை மாணவர்கள் பங்கேற்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, 28ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை எட்டு லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us