தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்பு?

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்பு?

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்பு?


UPDATED : மார் 22, 2011 12:00 AM

ADDED : மார் 22, 2011 05:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2011 12:00 AM ADDED : மார் 22, 2011 05:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களின் வளாகங்களை அமைத்துக் கொள்வதற்கான புதிய விதிமுறையை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.


தற்போது மேலாண்மை மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் இந்த அதிகாரம் இனிமேல் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் கிடைக்கும். வெளிநாட்டு வளாகங்களை தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்துவதற்கு, இந்திய மெடிக்கல் கவுன்சிலும், மத்திய அரசும் மறுத்து வந்ததால், அந்த கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடுத்தன. இதன் விளைவாகவே மத்திய சுகாதார அமைச்சகம் இந்த புதிய திட்டத்தை பரிசீலிக்கிறது.


இந்திய மருத்துவ கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டில் வழங்கும் மருத்துவ கல்வியில் எந்தவித தரக்குறைவும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிசெய்யவே சுகாதார அமைச்சகத்தின் இந்த புதிய விதிமுறை திட்டமிடப்படுகிறது. மேலும் இந்த புதிய விதிமுறை தொடர்பாக மனிதவள அமைச்சகத்தின் கருத்தை சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளது.


தற்போதைய எம்.சி.ஐ. விதிகளின்படி, இந்தியாவில் தனது தலைமையகத்தை கொண்டிருக்கும் ஒரு மருத்துவ கல்வி நிறுவனம், வெளிநாட்டில் வழங்கும் ஒரு மருத்துவ பட்டம், இந்தியாவில் தன்னிச்சையான அங்கீகாரத்தை பெற முடியாது. அது ஒரு வெளிநாட்டு பட்டமாகத்தான் கருதப்படும். தற்போதைய நிலையில் வெளிநாட்டில் பெறப்படும் ஒரு மருத்துவ பட்டம், எம்.சி.ஐ. மேற்கொள்ளும் ஸ்க்ரீனிங் ஆய்வில் தேறிய பிறகே, சம்பந்தப்பட்ட நபர் இந்தியாவில் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய நிலையில் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் மனிதவள அமைச்சகத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் படியே வெளிநாட்டில் வளாகங்களை அமைக்க அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அரசின் சில கட்டுப்பாடான விதிமுறைகளின் படியே வெளிநாட்டு வளாகங்களை திறக்க தகுதி பெறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us