தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கான்கிரீட் ஆராய்ச்சியில் பிரான்ஸ் குழுமத்துடன் சென்னை-ஐ.ஐ.டி. ஒப்பந்தம்

கான்கிரீட் ஆராய்ச்சியில் பிரான்ஸ் குழுமத்துடன் சென்னை-ஐ.ஐ.டி. ஒப்பந்தம்

கான்கிரீட் ஆராய்ச்சியில் பிரான்ஸ் குழுமத்துடன் சென்னை-ஐ.ஐ.டி. ஒப்பந்தம்


UPDATED : மார் 23, 2011 12:00 AM

ADDED : மார் 23, 2011 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2011 12:00 AM ADDED : மார் 23, 2011 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரான்ஸ் நாட்டின் சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான லபார்ஜ் குழுமத்தின் ஆராய்ச்சி பிரிவும், ஐ.ஐ.டி - சென்னையும் இணைந்து ஒரு திட்டத்தை விரைவில் துவக்க உள்ளன.


இந்த ஆராய்ச்சி திட்டமானது, பல்வேறு காலநிலைகளில் கான்கிரீட்டின் தாங்கு தன்மையைப் பரிசோதிக்கும் என்று சென்னை ஐ.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன. லபார்ஜ் குழுமத்திற்கும், ஐ.ஐ.டி - சென்னைக்கும் இடையே கடந்த வருடம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஐ.ஐ.டி - சென்னையின் சிவில் இன்ஜினீயரிங் துறையானது, கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு ஆய்வகத்தை அமைக்கும்.


இந்த ஆய்வகம் அமைய லபார்ஜ் 3 வருட காலகட்டத்திற்கு ரூ.1.5 கோடியை வழங்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள கான்கிரீட் மீது, பல்வேறான காலநிலைகளில், கார்போனேஷன் செயல்பாட்டால் உண்டாகும் விளைவுகள் பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.


லபார்ஜ் குழுமமானது, இந்தியாவில் மொத்தம் 4 சிமெண்ட் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. சத்தீஷ்கரில் இரண்டும், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒன்றும் உள்ளன. மேலும் ராஜஸ்தானில் ஒரு ஜிப்சம் பிளாஸ்டர்போர்டு உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us