UPDATED : மார் 24, 2011 12:00 AM
ADDED : மார் 24, 2011 05:43 PM
டெல்லி மாநில அரசு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.1,301 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது.
இந்த தொகையானது மாணவர்களின் நலன் கருதி அவர்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களை நியமித்தல், உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்விக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும்.
டெல்லி மாநில கல்வி துறையானது மாணவர்களின் கல்விக்கு பொறுப்பேற்கும் வகையில் சுமார் 14,000 ஆசிரியர்களை நியமித்துள்ளது. தலைமை ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் என எண்ணற்ற துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.191 கோடி செலவில் 15 புது பள்ளி கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணியானது தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
மாணவர்களுக்கு தேவையான நவீன கணினி ஆய்வகம், 2,678 வகுப்பறைகள், 1000 நவீன கழிப்பறைகள் என சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த மூன்று வருடத்திற்குள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ.யின் முன்னாள் தலைவர் அசோக் கங்குலி கூறுகையில், தாரமான கல்வியை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
