தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன

பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன

பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன


UPDATED : மார் 25, 2011 12:00 AM

ADDED : மார் 25, 2011 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2011 12:00 AM ADDED : மார் 25, 2011 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொதுத் தேர்வை, ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவ, மாணவியர் எழுதி வந்தனர். 1,890 மையங்களில் நடந்து வந்த தேர்வுகள், இன்றுடன் முடிகின்றன. கடைசி நாளான இன்று அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.


தேர்வுகளில், இந்த ஆண்டு பெரிய அளவிற்கு எந்த விதமான குளறுபடிகளும் நடக்கவில்லை. பெரும்பாலான தேர்வுகள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். கணிதத் தேர்வு மட்டும் கடினமாக இருந்ததாகவும், சில கேள்விகள் அச்சுப்பிழை காரணமாக, விடை எழுத முடியாத நிலை ஏற்பட்டது என்றும், மாணவர்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து, அச்சுப்பிழை கொண்ட கேள்வித் தாளுக்கு மட்டும், கேள்விக்குரிய மதிப்பெண்களை வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


கேள்வித் தாள்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தால், அவர் தேர்வுத்துறைக்கு அனுப்புவார். அதன் பின், கேள்வித் தாளில் அச்சுப்பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கேள்வித் தாளை பெற்ற மாணவருக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உறுதி அளித்துள்ளார்.


பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிந்ததும், 28ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. ஏப்.,11 வரை நடக்கும் அத்தேர்வை, 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


இதற்கிடையே, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி, 23ம் தேதி துவங்கியது. 43 மையங்களில், விறு விறுப்பாக விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஏப்., 10 க்குள் விடைத் தாள்களை திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே இரண்டாவது வாரம், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us