UPDATED : மார் 25, 2011 12:00 AM
ADDED : மார் 25, 2011 12:34 PM
ஜே.எம்.ஐ. பல்கலைக்கழகம், தனது கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான முறைகளை எளிதாக்கியுள்ளது. முன்பு, மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு என்று தனித்தனியாக பல நுழைவுத் தேர்வுகளை எழுதி வந்தனர். ஆனால் தற்போது பொதுவாக ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இது குறித்து ஜே.எம்.ஐ. துணை வேந்தர் நஜீப் ஜங் கூறுகையில், எங்கள் கல்வி நிலையத்தில் சேருவதற்காக வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்காக அதிக நாட்கள் இங்கு தங்கியிருக்க வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். இதுமட்டுமல்லாமல், வரும் கல்வி ஆண்டில் சில புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தவும், கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பாடப்பிரிவுகளை மீண்டும் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
