தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் 82 லட்சம் வேலைவாய்ப்புகள்

கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் 82 லட்சம் வேலைவாய்ப்புகள்

கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் 82 லட்சம் வேலைவாய்ப்புகள்


UPDATED : மார் 26, 2011 12:00 AM

ADDED : மார் 26, 2011 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 26, 2011 12:00 AM ADDED : மார் 26, 2011 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறையில் வாய்ப்புகளும் எதிர்காலமும் என்ற தலைப்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் ஸ்ரீதர் பேசியதாவது: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை பயன்பாடு (அப்ளிகேஷன்ஸ்), தொழில்நுட்பம், திறன் என மூன்று பிரிவுகளில் உள்ளடக்கலாம். எவ்வகையிலான பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியம்.


கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரியில் ஆய்வகம், பேராசிரியர்களின் திறன், இணையம், நூலகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வளாகத் தேர்வில் பங்குபெறும் நிறுவனங்கள், வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட சதவீதம், மதிப்புக் கூட்டும் கூடுதல் தகுதிப் படிப்புகள், கல்வி நிறுவனத்துக்கும் பிற தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆட்டோமொபைல், பேங்கிங், பி.பி.ஓ., ஹாஸ்பிடாலிட்டி, சில்லறை வர்த்தகம், மருந்துகள், ஏவியேஷன், பயோடெக், ஐ.டி., மீடியா, டெலிகாம் என பல்வேறு துறைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை வேலைவாய்ப்புகளை அள்ளித்தருகிறது.


வரும் 2011ம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பத்துறையில் 7,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு, வர்த்தகம் இருக்கும். 2.26 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும், 80 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் இருக்கும். ஊதிய உயர்வு 30 முதல் 40 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான, தகுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இவ்வாறு, ஸ்ரீதர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us