தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு கல்வி பயின்றால் உயர்ந்த நிலையை அடையலாம்

வெளிநாட்டு கல்வி பயின்றால் உயர்ந்த நிலையை அடையலாம்

வெளிநாட்டு கல்வி பயின்றால் உயர்ந்த நிலையை அடையலாம்


UPDATED : மார் 26, 2011 12:00 AM

ADDED : மார் 26, 2011 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 26, 2011 12:00 AM ADDED : மார் 26, 2011 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.ஆர்.எம். மற்றும் தினமலர் இணைந்து வழங்கும் "வழிகாட்டி" நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான்று, அவர் பேசியதாவது: அரசியல் தலைவர்கள், மேதைகள் வெளிநாட்டு கல்வி பயின்று இந்தியாவில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். மகாத்மா காந்தி, அம்பேத்கார், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை வெளிநாட்டு கல்வி பயின்றவர்கள் தான். இந்தியாவில் கல்வி பயின்று 15 ஆண்டுகள் கழித்து ஏற்படும் முன்னேற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு அனைத்தும், வெளிநாட்டில் கல்வி பயின்ற ஐந்தாண்டுகளில் கிடைத்துவிடும்.


புள்ளி விவரத்தின் படி, அமெரிக்காவில் 12 சதவீத டாக்டர்கள் இந்தியர்கள். 12 சதவீத விஞ்ஞானிகள், 34 சதவீத மைக்ரோ சாப்ட் நிறுவன பணியாளர்கள், 28 சதவீத ஐ.பி.எம்., பணியாளர்கள் இந்தியர்கள் தான். மொத்தம் 23 சதவீதம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.


இந்தியாவில் ஆண்டு தோறும் இரண்டு லட்சம் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பயில்கின்றனர். இதில் அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், சைப்ரஸ், மாஸ்கோவில் கல்வி பயில்பவர்கள் அதிகம். அமெரிக்க கல்வி மட்டுமல்ல, தற்போது உலகம் முழுதும் தரமான கல்வி தரும் நாடுகள் உள்ளன. ஆசிய நாடுகளிலும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். யார் வேண்டுமானாலும் வெளிநாட்டில் கல்வி கற்கலாம் என்ற நிலை உள்ளது.


அங்கே பெரும்பாலும் இடஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு கிடையாது. திறமையின் அடிப்படையில் சேர்க்கையும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். மாணவர்கள் படிக்கும் விருப்பப் பாடத்தை இடையில் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.


பட்டப்படிப்பை முழுதுமாக வெளிநாட்டில் படித்தால் அதிக செலவாகும். அதற்கு பதிலாக, முதல் நான்கு செமஸ்டர்கள் உள்நாட்டிலும், கடைசி இரண்டு செமஸ்டர்கள் வெளிநாட்டிலும் படிக்கும் வசதி உள்ளது. அமெரிக்கா, ஜப்பானுடன் ஒப்பிடும் போது நாம் மக்கள் தொகையில் பத்து மடங்கு அதிகமாக உள்ளோம். ஆனால் பல்கலைகழகங்களின் எண்ணிக்கையில், பத்து மடங்கு குறைவாக உள்ளோம். இந்தியாவில் இல்லாத படிப்புகளை மட்டுமே வெளிநாட்டில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. எனவே விருப்பப்பட்ட பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம். இதற்கு வங்கிகளும் கடன் வழங்குகின்றன. தற்போது வெளிநாட்டு கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடித்த பின், முதுநிலை டிப்ளமோ அல்லது முதுநிலை படிப்பதற்கு வெளிநாடு செல்லலாம்.


அமெரிக்கா செல்வதற்கு "டோபல்", இங்கிலாந்து செல்ல "ஐ.இ.எல்.எஸ்." நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு, பேசும் விதம், எழுதும் விதம் ஆகியவற்றை கற்றுத் தரும் குறைந்த கால படிப்புகள் இவை. இந்தியாவில் ஜூன் அல்லது ஆண்டில் ஒருமுறை மட்டும் கல்வியாண்டு நடக்கிறது.


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் ஓராண்டில் இருமுறை கல்விச் சேர்க்கை நடத்தப்படுவதால், பாஸ்போர்ட், விசா எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.


சீனா, ஜப்பான் நாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பினால், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரியா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் படித்த நேரம், படிக்கும் காலம், பணம் வீணாகிவிடும். இத்தகைய கல்லூரி, பல்கலைகழகங்களில் சேர்க்கை பெற்று தருவதற்கு, சிபாரிசு செசய்வார்கள். ஆனால் அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்பதால், முறையான, தரமான, அங்கீகாரமான வெளிநாட்டு படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us