தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருப்பக் கல்வியே சிறந்தது - பேராசிரியர் கண்ணன்

விருப்பக் கல்வியே சிறந்தது - பேராசிரியர் கண்ணன்

விருப்பக் கல்வியே சிறந்தது - பேராசிரியர் கண்ணன்


UPDATED : மார் 28, 2011 12:00 AM

ADDED : மார் 28, 2011 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2011 12:00 AM ADDED : மார் 28, 2011 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"மாணவர்களுக்கு பிடித்தமான பாடத்தை தேர்ந்தெடுக்க, பெற்றோர் அனுமதிக்க வேண்டும்" என தினமலர் எஸ்.ஆர்.எம். இணைந்து வழங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கான "வழிகாட்டி" நிகழ்ச்சியில் பேராசிரியர் ம. கண்ணன் தெரிவித்தார்.


கடந்த மூன்று நாட்களாக (மார்ச் 25-27) மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில், பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான தேடல் குறித்த விளக்கக் கருத்தரங்குகளும், கல்வி நிறுவனங்களின் கண்காட்சியும் நடந்தன.


நேற்று வரை நடந்த கருத்தரங்கில் 16 நிபுணர்கள், தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர். நேற்று நடந்த கருத்தரங்கில் "இனி என்ன செசய்யலாம்" என்ற தலைப்பில் பேராசிரியர் கண்ணன் பேசியதாவது: எந்தப் படிப்பை பிள்ளைகள் தேர்ந்தெடுத்தாலும், அவர்களின் விருப்பப்படியே படிக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் என்ன நினைக்கின்றனர், என்ன உணர்வோடு இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே, அவர்களின் நடத்தை நிர்ணயம் செசய்யப்படுகிறது.


நிறைய மாணவர்களுக்கு, பெற்றோர்களைப் பிரிந்து விடுதிகளில் தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அத்தகு நேரங்களில் பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமை. இதுவரை படித்த பாடப்புத்தகங்களை தூக்கி எறிந்து விடாமல், புத்தகம் வாங்க வழியில்லாத மாணவர்களுக்கு கொடுக்கலாம்.


எந்த படிப்பு படித்தாலும் வேலைக்குச் செல்லும் போது கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதுவரை படிக்காவிட்டாலும், விடுமுறை காலத்திலாவது கம்ப்யூட்டர் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலக் கல்வி பயின்ற மாணவர்கள் கூட இன்னமும் சக மாணவர்களிடம் பேச கூச்சப்படுகின்றனர். கல்லூரிப் பருவத்தில் இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.


தங்களை வருத்திக் கொண்டு, நிலைமைக்கு மீறி செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக மாற வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us