தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாராமெடிக்கல் பாடப்பிரிவை பற்றி அறிவோம்

பாராமெடிக்கல் பாடப்பிரிவை பற்றி அறிவோம்

பாராமெடிக்கல் பாடப்பிரிவை பற்றி அறிவோம்


UPDATED : மார் 28, 2011 12:00 AM

ADDED : மார் 28, 2011 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2011 12:00 AM ADDED : மார் 28, 2011 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

"ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்" என்ற தலைப்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் ராஜானந்த் பேசியதாவது: பாராமெடிக்கல் நிபுணர்களின் உதவி இல்லாமல், டாக்டர்கள் செயல்பட முடியாது. ஒரு டாக்டர் சிகிச்சை அளிக்கும் போது 8 ஹெல்த்கேர் எக்ஸ்சிகியூடிவ்ஸ்சின் உதவி தேவைபடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


டி.பார்ம்., எம்.பார்ம்., உள்பட பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் இத்துறையில் உள்ளன. பாராமெடிக்கல் படிக்கும் மாணவ, மாணவியருக்கு எதிர்காலத்தில் மருத்துவமனை நிர்வாகம், கிளினிக்கல் பார்மசிஸ்ட், கிளினிக்கல் டிரையல் ஒருங்கிணைப்பாளர், எக்ஸ்ரே, ஸ்கேன், ரேடியாலஜி டெக்னீசியன்ஸ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.


ஒரு சில படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.


பாராமெடிக்கல் நிபுணர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நல்ல சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது.


பாராமெடிக்கல் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் தகவல் பரிமாற்றத் திறன், தனித்திறன், நல்ல உடற்தகுதி, மனப்பக்குவம், இணைந்து செயல்படும் பாங்கு, சிறந்த நுட்ப கவனம் உள்ளிட்டவை கொண்டிருத்தல் அவசியம்.


பார்மசிஸ்ட், பிசியோதெரபி, நர்சிங், ரேடியோலஜிஸ்ட், ஆக்குபேஷனல்தெரபி உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும் மாணவ, மாணவியர் திட்டமிட்டு, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்போடு செயல்பட்டால் எதிர்காலம் வளமானதாக இருக்கும். இவ்வாறு, விரிவுரையாளர் ராஜானந்த் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us