UPDATED : மார் 29, 2011 12:00 AM
ADDED : மார் 29, 2011 09:57 AM
அ நிறம் | அளவு
மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் ராஜ்யகொடி வெளியிட்ட அறிக்கை: மதுரை காமராஜ் பல்கலை எம்.பில்., நவம்பர் செமஸ்டர் தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
www.mkuniversity.org என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் பெற, பழைய மதிப்பெண் பட்டியலை, மறுமதிப்பீட்டு முடிவு நகலுடன் இணைத்து, கல்வி பயின்ற கல்லூரி முதல்வர்களிடம் ஒப்படைத்து, புதிய மதிப்பெண் பட்டியலை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
