UPDATED : மார் 29, 2011 12:00 AM
ADDED : மார் 29, 2011 06:11 PM
நவீன யுகத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் சேவைகள் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளன என்று மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் பைனான்ஸ்(என்.ஐ.சி.எப்) மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ரேடியோ ஸ்பெக்ட்ரம் இன்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்(ஐ.ஏ.ஆர்.எஸ்.இ.எம்.எஸ்) ஆகிய கல்வி நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய கபில் சிபல் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "பயிற்சியின் மூலமாக சிறந்த நிர்வாகம், தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் மீட்கொணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. புதிய யுகத்தின் தொழில் நிபுணர்களை உருவாக்க, இந்த கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் பலவிதமான அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதைப் பற்றி முன்னோக்கி சிந்திக்க வேண்டும். இந்த 2 கல்வி நிறுவனங்களும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டை அடைவதற்கு கடுமையாக முயற்சி செய்யும்" என்றார்.
