தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஐ.டி.ஐ. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஐ.டி.ஐ. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது


UPDATED : மார் 31, 2011 12:00 AM

ADDED : மார் 31, 2011 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2011 12:00 AM ADDED : மார் 31, 2011 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சில ஆண்டுகளாக தொழிற்கல்வியை அளிக்கும் ஐ.டி.ஐ.யில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லை மண்டல என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ.க்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெயராஜன், செயலாளர் சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 110 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 600 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மாநில அரசு, மத்திய அரசு என்.சி.வி.டி., அங்கீகாரத்துடன் இயங்கி வருகின்றன.


நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றவர்கள் தேவை. சில ஆண்டுகளாக ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை 50% குறைந்துள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது.


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் ஐ.டி.ஐ.க்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐ.டி.ஐ.யில் சேர முடியும் என்ற நிலையுள்ளது. 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர்.


தேர்தல் அறிக்கையில் கட்சிகள் அறிவித்த லேப்டாப், கட்டணச்சலுகை ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களே ஐ.டி.ஐ.க்களில் சேருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் இலவச பஸ்பாஸ், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுவதில்லை. எனவே ஐ.டி.ஐ.க்களில் சேர மாணவர்கள் தயங்குகின்றனர்.


ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் தேர்தல் அறிக்கைகளில் சலுகைகளை கட்சிகள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us