UPDATED : மார் 31, 2011 12:00 AM
ADDED : மார் 31, 2011 06:04 PM
நீண்ட இடைவெளிக்கு பின் வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு உதவும் வகையில் எஸ்.ஒ.ஐ.எல். புது பாடப்பிரிவினை வழங்கியுள்ளது.
ஸ்கூல் ஆப் இன்ஸ்ப்ரெட் லீடர்ஷிப் (எஸ்.ஒ.ஐ.எல்) மேலாண்மை கல்வி நிறுவனம் ஒரு வருட படிப்பாக கேரியர் ரீ-கனெக்ட் பார் உமன் என்ற புது பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பாடப்பிரிவானது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஆதாயம் பெறுவதற்கும் பணி சூழலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் திறமையை வெளிபடுத்தும் வகையில் இது அமையும். பெரும்பாலான படித்த பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக தங்களது திறமையை மறந்து இல்லதரசிகளாகவே வாழ்கின்றனர்.
புரிந்து கொள்ளும் திறமை இந்திய பெண்களுக்கு அதிகம். ஆகையால் குடும்ப சூழ்நிலையிலிருந்து தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு பணியில் செலுத்த வேண்டும் என்பதற்காக எஸ்.ஒ.ஐ.எல் பெண்களுக்காக புதிய பாடப்பிரிவினை வழங்கியுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய: http://soil.learnhub.com/
