எங்கு படிக்கலாம்... என்ன படிக்கலாம்... வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்
எங்கு படிக்கலாம்... என்ன படிக்கலாம்... வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்
UPDATED : ஏப் 01, 2011 12:00 AM
ADDED : ஏப் 01, 2011 06:14 PM
'தினமலர்' நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும், "வழிகாட்டி' கருத்தரங்கு 1ம் தேதி துவங்கியது. தேர்வு எழுதி முடித்து அடுத்து மேற்படிப்பில் சேர காத்திருக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும், அவர்களின் பெற்றோருக்கும் வழிகாட்டும் வகையில், "எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம்&' என்பது குறித்து வழிகாட்டுவதற்காக பல ஆண்டுகளாக, இக்கருத்தரங்கு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான, "வழிகாட்டி' கருத்தரங்கு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இன்று துவங்கியது. கருத்தரங்கு காலை 10 மணி முதல் பதினொன்றரை மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் மதியம் ஐந்தரை மணி வரையிலும் கருத்தரங்கு நடக்கிறது. கருத்தரங்கினை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக முதன்மை கல்வி அதிகாரி, முனைவர் மு.பொன்னவைக்கோ துவக்கி வைத்தார்.
வரும் 3ம் தேதி வரை நடைபெறும், இக்கருத்தரங்கில் 2ம் தேதி அன்று, காலை ஒரு வேளை மட்டும் கருத்தரங்கு நடக்கிறது. மற்ற நாட்கள், காலை, மாலை இரு வேளையும் கருத்தரங்கு நடக்கிறது. இதில், 20க்கும் மேற்பட்ட பல்துறை கல்வி வல்லுனர்கள் ஒரே இடத்தில் பங்கேற்று, கலை, அறிவியல், பொறியியல் என, பல்வேறு படிப்புகளின் மேற்படிப்பு குறித்து மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் தகுந்த கல்வி குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். அத்துடன் உயர் கல்வி குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும் வல்லுனர்கள் நேரடி பதில் அளிக்கின்றனர்.
மேலும், கல்வி குறித்த கண்காட்சி காலை பத்தரை மணி முதல் இரவு ஏழு மணி வரை நடக்கிறது. இங்கு, "கல்லூரி அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை' எல்லாம் உண்டு. இதற்காக இங்கு 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக, "கேன்டீன்' வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவருக்கும் எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது? என்பது குறித்த முழுமையான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப் படுகிறது.
