தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஐ.ஏ.எஸ்., படிப்பு யாருக்கு சரியானது?’: ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு

‘ஐ.ஏ.எஸ்., படிப்பு யாருக்கு சரியானது?’: ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு

‘ஐ.ஏ.எஸ்., படிப்பு யாருக்கு சரியானது?’: ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு


UPDATED : ஏப் 02, 2011 12:00 AM

ADDED : ஏப் 02, 2011 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2011 12:00 AM ADDED : ஏப் 02, 2011 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கும், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று துவங்கியது.‘தினமலர்’ நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியையொட்டி நடத்தப்படும் கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, எஸ்.ஆர்.எம்., பல்கலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னவைகோ நேற்று காலை துவக்கி வைத்தார்.


கருத்தரங்கில், ‘எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகள்’ குறித்து, உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., பேசியதாவது: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருக்கிறது. இதற்கு, பெற்றோர் தங்கள் விருப்பங்களை பிள்ளைகள் மீது திணிப்பது முக்கிய காரணம். உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் உரிமையை, தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்க வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.


மருத்துவம், ஐ.டி., என ஒவ்வொரு துறைக்கும் ஒரு சிறப்பு உண்டு. லட்சக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கிடைக்கிறது. சமூகத்தில் நிகழும் அநியாயங்களை கண்டு கோபப்படுவோருக்கு, ஐ.ஏ.எஸ்., படிப்பு சரியான களம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஆக விரும்புவோர், தினமும் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களின் மொழி அறிவு, பொது அறிவு ஆகியவை வளரும். ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்த சந்தேகங்களை மாணவர்கள்,  udhay17@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.இவ்வாறு உதயசந்திரன் பேசினார்.


‘60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களுக்கான வழிகாட்டுதல்’ எனும் தலைப்பில் ரமேஷ் பிரபா பேசியதாவது:


கவுன்சிலிங்கில், பி.இ., எம்.பி.பி.எஸ்., படிக்க, ‘சீட்’ கிடைக்காவிட்டால், நம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். இந்திய மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ‘ஓட்டல் மேனேஜ்மென்ட், சி.ஏ., பேஷன் தொழில்நுட்பம்’ என, உயர்கல்வியில் இன்று பல்வேறு தொழில் படிப்புகள் உள்ளன. இவற்றை பற்றிய புரிதல் தான் நமக்கு தேவை.


கல்லூரி பருவத்தில், யாருக்கும் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பக்குவம் வருவதில்லை. இன கவர்ச்சியின் காரணமாக ஏற்படும் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், வாழ்வில் வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.


‘வெளிநாடுகளில் சென்று படிப்பது எப்படி?’ என்பது குறித்து, பால் செல்லக்குமார் பேசினார். ‘வழிகாட்டி’ நிகழ்ச்சியையொட்டி, சுப்புலட்சுமி லெட்சுமிபதி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்., இன்போடெக், எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்வி நிறுவனம் உள்ளிட்ட 95 உயர்கல்வி நிறுவனங்கள், ‘ஸ்டால்’கள் அமைத்துள்ளன. இவற்றின் மூலம், உயர்கல்வி படிப்புகள் குறித்த விவரங்களை மாணவர்கள் கேட்டறிந்தனர்.


முன்னதாக, ‘எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?’ என்ற வழிகாட்டி புத்தகம், மாணவர்களுக்கு இலவசமாக தரப்பட்டது. கருத்தரங்கம் மற்றும் கல்வி கண்காட்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமாக பங்கேற்றனர். நாளை வரை இக்கண்காட்சி நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us