தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பை விட படிக்கும் கல்லூரி தான் முக்கியம் - பேராசிரியர் கஜேந்திரன்

படிப்பை விட படிக்கும் கல்லூரி தான் முக்கியம் - பேராசிரியர் கஜேந்திரன்

படிப்பை விட படிக்கும் கல்லூரி தான் முக்கியம் - பேராசிரியர் கஜேந்திரன்


UPDATED : ஏப் 04, 2011 12:00 AM

ADDED : ஏப் 04, 2011 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2011 12:00 AM ADDED : ஏப் 04, 2011 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீங்கள் தேர்வு செய்யும் படிப்பை விட, நீங்கள் படிக்கும் கல்லூரியை தேர்வு செய்வது தான் மிக முக்கியம் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் கஜேந்திரன் கூறினார்.


தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எந்த கல்லூரியில் என்ன படிப்பு படிக்கலாம் என்பது குறித்து வழிகாட்டும் இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலையில் நடந்த கருத்தரங்கில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் எதிர்காலம் குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் கஜேந்திரன் விளக்கம் அளித்து பேசியதாவது: மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டும் தான் நல்ல எதிர்காலம் உள்ளது என, கருதுவது தவறானது. அதையும் தாண்டி பல்வேறு படிப்புகள் உள்ளன. அவற்றிற்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.


அதிலும், கலை, அறிவியல் படிப்புகளுக்கு எங்கும், எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அனைத்து விதமான நிறுவனங்களிலும் இந்த படிப்புகளுக்கு நல்ல மரியாதை இருந்து வருகிறது. நீங்கள் எந்த படிப்பு படித்தாலும், அவற்றை தேர்ந்தெடுக்கும் முன், நீங்கள் படிக்கப் போகின்ற கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்குள்ள, சிலபஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எந்த கல்லூரியில் படித்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமோ, அந்த கல்லூரியைத் தேர்வு செய்து படியுங்கள். இவ்வாறு கஜேந்திரன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us