தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் பெண்களுக்கு வேலைக்கு செல்லும் ஆர்வம் குறைவு

இளம் பெண்களுக்கு வேலைக்கு செல்லும் ஆர்வம் குறைவு

இளம் பெண்களுக்கு வேலைக்கு செல்லும் ஆர்வம் குறைவு


UPDATED : ஏப் 04, 2011 12:00 AM

ADDED : ஏப் 04, 2011 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2011 12:00 AM ADDED : ஏப் 04, 2011 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம் பெண்களிடம் வேலை பார்ப்பதிலும், திறமையை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வமும் குறைந்து கொண்டு வருகிறது என மதுரை காமராஜ் பல்கலை டீன் டேவிட் அமிர்தராஜ் கவலை தெரிவித்தார்.


மதுரை பாத்திமா கல்லூரியில், மாணவிகள் பேரவை விழா நடந்தது. இதில் அவர் பேசியாதவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2 கோடி ஆண்கள், ஒரு கோடி பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். சமுதாயத்தில் பெண்களின் மதிப்பு, வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றால் குறிக்கோளும், நினைத்த இலக்கை அடைவேன் என்ற எண்ணம் வேண்டும்.


இன்று சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது மாணவிகளிடம் நம்பிக்கை குறைவாக காணப்படுகிறது. குறிக்கோள் இல்லாத மனிதன் முன்னேற முடியாது. பட்டம் பெற்றதும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு தேவை. பெற்றோர், கணவர், பிள்ளை என ஒவ்வொரு பருவத்திலும் யாராவது ஒருவருக்கு அடிமையாக இருக்கும் நிலையை தகர்த்து, பெண்கள் வெளியே வரவேண்டும்.


கணவன் செய்யும் தவறுகளை, தவறு என சுட்டிக் காட்டும் சுதந்திரம் மறுக்கப்படும் நிலை மாறி, கேள்வி கேட்கும் மனோபாவம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மொபைல்போனும், டிவியும் பெண்களின் உழைப்பையும் நேரத்தையும் வீணாக்குகிறது. பிராய்லர் கோழிகளைப் போல் உலகம்
தெரியாத அலங்கார பதுமைகளாக வாழக்கூடாது. உழைக்கும் வர்க்கத்திற்குள் பெண்கள் வந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். தரமான கல்வியும் உழைப்பு இருந்தால் நல்ல வாழ்க்கைத் தரம் அமையும். இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்றால் படித்த பெண்களின் பங்களிப்பு நாட்டிற்கு தேவை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us