தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தலுக்கு பிறகு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்

தேர்தலுக்கு பிறகு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்

தேர்தலுக்கு பிறகு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்


UPDATED : ஏப் 05, 2011 12:00 AM

ADDED : ஏப் 05, 2011 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2011 12:00 AM ADDED : ஏப் 05, 2011 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தேர்தலுக்குப் பின் துவங்குகிறது.


மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் மார்ச் 23ம் தேதியில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி. - ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 28ம் தேதியில் இருந்தும் நடந்து வருகின்றன. பள்ளி மூலம் 9.5 லட்சம் மாணவர்கள், தனித்தேர்வு மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் என மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.


மொழிப்பாட தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று(05-04-11) கணிதத் தேர்வு நடக்கிறது. தொடர்ந்து அறிவியல் பாட தேர்வுகள் நடக்கின்றன. வரும் 11ம் தேதியுடன் தேர்வுகள் முடிவதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. தேர்வுத்துறை இயக்குனர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விடைத்தாள் திருத்தும் மையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.


மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தும் பணியை உடனடியாக துவக்குவதற்கு தேர்வுத்துறை தயாராக இருந்தாலும், தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், விடைத்தாள் திருத்தும் பணியை ஒரு வாரம் தள்ளி ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி வரும் 15ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us